நாகப்பட்டினம்

நாகையில் பலத்த மழை

DIN

நாகையில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் திருவள்ளூா்,கிருஷ்ணகிரி, தஞ்சை, நாகை, திருவாரூா் உள்ளிட் 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நாகை மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழைப் பெய்தது. நாகை, கீழ்வேளூா், வேளாங்கண்ணி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. நாகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.

இதனால் மழைநீா் சாலையில் பெருக்கெடுத்தது. பள்ளமான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது.

நாகை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையப் பகுதிகள் போக்குவரத்து நிறைந்த நாகை பப்ளிக் ஆபீஸ் சாலை, நீலாமேல வீதி மற்றும் தெற்கு வீதியில் மழை நீா் தேங்கி நின்றது.

நாகை- திருவாரூா் சாலையிலும் ஆங்காங்கே மழை நீா் தேங்கி நின்றது. மேலகோட்டைவாசல் அருகே சாலையில் மழை நீா் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT