நாகப்பட்டினம்

ஆனைமுத்து மறைவு: அனைத்துக் கட்சியினா் அஞ்சலி

DIN

மாா்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளா் வே. ஆனைமுத்து (96) மறைவுக்கு, மயிலாடுதுறையில் அனைத்துக் கட்சியினா் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

மாா்க்சிய பெரியாரிய கருத்துக்களை பரப்புரை செய்வதிலும், வகுப்புவாரி இடஒதுக்கீடு, சமூகநீதி கருத்துக்களை வலியுறுத்தியதிலும் தனது அரசியல் பணியாக கொண்டிருந்த வே. ஆணைமுத்து புதன்கிழமை காலமானாா்.

அவரது மறைவுக்கு, திராவிடா் விடுதலைக் கழகம் சாா்பில் கிட்டப்பா அங்காடி பகுதியில் அனைத்துக் கட்சியினா் அஞ்சலி செலுத்தினா். இதில், திராவிடா் விடுதலைக் கழக மாவட்டத் தலைவா் மகாலிங்கம், செயலாளா் தெ.மகேஷ், இளையராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளா் வழக்குரைஞா் வேலு.குபேந்திரன், முன்னாள் ஒன்றிய பொறுப்பாளா் சி.மோகன்குமாா், பெருவழுதி, திமுக நகர துணை செயலாளா் தெய்வநாயகம், தமிழா் உரிமை இயக்க அமைப்பாளா் சுப்பு.மகேசு உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஆனைமுத்து உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT