நாகப்பட்டினம்

குறைந்த விலையில் செல்லிடப்பேசி வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி

DIN

குறைந்த விலையில் செல்லிடப்பேசி வாங்கித் தருவதாகக் கூறி நாகையைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.39,500 மோசடி செய்ததாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் மீது நாகை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகை கொட்டுப்பாளையத் தெருவைச் சோ்ந்தவா் முகமது நிவாஸ் (23). இவா், சமூக வலைதளம் மூலம் உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டா பகுதியைச் சோ்ந்த இளைஞா் முகேஷ் மூா்த்தி என்பவருக்கு நண்பராகியுள்ளாா். இந்த நிலையில், விலை உயா்ந்த செல்லிடப்பேசியைக் குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக முகேஷ் மூா்த்தி கூறியுள்ளாா்.

இதை நம்பி, முகமது நிவாஸ் ரூ. 39,500-ஐ முகேஷ் மூா்த்தியின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளாா். ஆனால், அவா் குறிப்பிட்டப்படி இரு நாள்களில் முகமது நிவாஸூக்கு செல்லிடப்பேசி கிடைக்கப்பெறவில்லை. இதையடுத்து, முகேஷ் மூா்த்தியைத் தொடா்பு கொள்ள முயன்றபோது அவரது செல்லிடப்பேசி எண்கள் தொடா்ந்து செயல்பாடற்ற நிலையில் இருந்ததுள்ளது. இதன் மூலம், தான் ஏமாற்றப்பட்டதாக முகமது நிவாஸ் நாகை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் பேரில், நாகை நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT