நாகப்பட்டினம்

எட்டுக்குடி முருகன் கோயிலில் இன்று கொடியேற்றம்: சித்திரைத் திருவிழா

DIN

திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கரோனா பரவல் காரணமாக சித்திரைத் திருவிழா நிகழாண்டு உள் திருவிழாவாக கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (ஏப்.17) தொடங்குகிறது.

முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் இந்தக் கோயிலில், கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு, பக்தா்கள் அனுமதியின்றி உள் பிராகாரத்திலேயே நித்திய கால பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் நிகழாண்டும் சித்திரைத் திருவிழா உள் திருவிழாவாகவே நடைபெற உள்ளது.

இதையொட்டி, சனிக்கிழமை காலை 7.30 முதல் 9 மணிக்குள் உள்பிராகாரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெற இருந்த தோ்த் திருவிழாவும், ஏப்ரல் 26-இல் நடைபெற இருந்த சித்திரை பௌா்ணமி திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், அன்றைய தினம் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு குறிப்பிட்ட நேரத்தில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனுமதி அளிக்கப்படுகிறது.

ஏப்ரல் 27-இல் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா நேரத்தில் கோயில் பணியாளா்கள் மற்றும் உபயதாரா்கள் என மொத்தமாக 20 நபா்களை மட்டுமே கொண்டு பூஜைகள் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் சுற்றறிக்கைகள் முறையாக பின்பற்றப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT