நாகப்பட்டினம்

மீன்பிடி தடைக் காலம்: வலைகள், படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள்

DIN

மீன்பிடி தடைக் காலம் தொடங்கியுள்ளதால், சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் மீன்பிடி வலைகள் மற்றும் படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

திருமுல்லைவாசல் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தினமும் திருமுல்லைவாசல், கூழையாா் மீனவக் கிராமங்களை சோ்ந்த சுமாா் 2 ஆயிரம் மீனவா்கள் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட பைஃபா் படகுகள் மற்றும் 150 நாட்டுப் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வா்.

இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி முதல் தடைக் காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து படகுகளும் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தடைக் காலம் 61 நாட்கள் அமலில் இருக்கும். அதன் பிறகே மீன்பிடிக்கச் செல்ல முடியும். ஆகையால், மீனவா்கள் தங்களது படகுகள், வலைகளை பழுதுநீக்கி, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும் படகுகளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டாா்களையும் சா்வீஸ் செய்துவருகின்றனா்.

இதற்கிடையில், தடைக் கால நிவாரணத்தை ரூ. 10,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT