முகப்பு
நாகப்பட்டினம்

கோடியக்கரை அருகே கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகு

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை அருகே ஆளில்லா இலங்கைப் படகு ஒன்று இன்று (ஏப்.23) பகல் கரை ஒதுங்கியது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
கரை ஒதுங்கிய இலங்கைப் படகு.
பகிர்:

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை அருகே ஆளில்லா இலங்கைப் படகு ஒன்று இன்று (ஏப்.23) பகல் கரை ஒதுங்கியது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நாகை மாவட்டம், கோடியக்கரை, திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சி.மதன்ராஜ் (40). இவருக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகில் சென்ற 4 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

கோடியக்கரைக்கு தென் மேற்கே (செல்லகன்னிவாய்காலுக்கு தெற்கே) சுமார் 10 கடல் மையில் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது தண்ணீல் பாதி மூழ்கிய நிலையில் படகு ஒன்று மிதந்துள்ளது.

இது இலங்கை நாட்டைச் சேர்ந்த எப்ஆர்பிஏ 4353 – ஜெஎப்என் என்ற எண் கொண்ட படகு என்பது தெரிய வந்தது. இந்த ஆளில்லா படகினை சக மீனவர்கள் தங்களது படகில் கயிற்றால் கட்டி கோடியக்கரை பகுதி துறைக்கு இழுத்து வந்தனர்.

இந்த படகினை கைப்பற்றிய கோடியக்கரை சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர். வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸார், தனிப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →