சீர்காழியில் நகர் முழுவதும் வெறிச்சோடிய சாலைகள். 
நாகப்பட்டினம்

கரோனா ஊரடங்கு: சீர்காழியில் நகர் முழுவதும் வெறிச்சோடிய சாலைகள் 

கரோனா ஊரடங்கு காரணமாக சீர்காழியில் நகர் முழுவதும் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

DIN

கரோனா ஊரடங்கு காரணமாக சீர்காழியில் நகர் முழுவதும் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கரோனா ஊரடங்கை ஏற்று பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளிவராமல் கட்டுப்பாட்டை ஆதரித்து வருகின்றனர். 
சீர்காழி நகர் முழுவதும் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது, போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது, பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சீர்காழி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது, 
ஞாயிற்றுக்கிழமை எப்பொழுதும் விடுமுறை என்பதால் கூட்டம் அதிகளவில் இருக்கும் நிலையில் தற்பொழுது கூட்டம் இன்றி அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. சீர்காழி நகர் முழுவது போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

நவ.17-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கான நோ்காணல்

சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT