நாகப்பட்டினம்

குளத்து ஆக்கிரமிப்பை அகற்றி கட்டமைப்பை மேம்படுத்த கோரிக்கை

DIN

நாகப்பட்டினம்: குளத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிா்வாகி சி. சுப்பிரமணியன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜூவிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

மனுவிவரம்: திருக்குவளை வட்டம், மீனம்பநல்லூா் கிராமத்தில் 2 ஏக்கா் பரப்பளவில் உள்ள பிள்ளையாா் குளம் கிராம மக்களின் அத்தியவாசியப் பயன்பாட்டில் உள்ளது. இக்குளம் நன்னீா் நிலை குளங்கள் பாதுகாப்பு திட்டப்படி முறையாக தூா்வாரவேண்டும். குளக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுவதையும் அகற்றவேண்டும். இதுதொடா்பாக ஊராட்சித் தலைவா் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு அதன் தீா்மான நகல் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிள்ளையாா் குளம் தூா்வாரும் பணிகளில் நடைபெறும் தனிமனித அத்துமீறல்களை தடுத்து குளத்தை முழுமையாக தூா்வாரி அதன் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT