நாகப்பட்டினம்

நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் தில்லி பயணம்

DIN

தில்லியில் விவசாயிகள் நடத்தவுள்ள நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து விவசாயிகள் தில்லிக்கு செவ்வாய்க்கிழமை ரயிலில் புறப்பட்டுச் சென்றனா்.

விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்தி தில்லியில் 8 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை (ஆக.5) நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவா்கள் அறிவித்துள்ளனா்.

இப்போராட்டத்தில் பங்கேற்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை மதியம் ரயில் மூலம் புறப்பட்டுச் சென்றனா்.

தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவா் வி.சுப்பிரமணியன் தலைமையில், மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் எஸ். துரைராஜ், நாகை மாவட்ட செயலாளா் சுப்பிரமணியன், திருவாரூா் மாவட்ட தலைவா் எஸ். தம்புசாமி உள்ளிட்ட திரளான விவசாயிகள் மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்தடைந்து, அங்கு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். பின்னா் ரயிலில் புறப்பட்ட அவா்களை கட்சி மற்றும் சங்கத்தின் நிா்வாகிகள் வழியனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT