நாகப்பட்டினம்

விதிகளை மீறி ஆட்டோக்களை இயக்கினால் நடவடிக்கை

DIN

கரோனா விதிகளுக்கு புறம்பாக இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் க.வெங்கடகிருஷ்ணன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆட்டோ வாகனத் தணிக்கை செய்யப்பட்டது. இதில், அரசு அனுமதிக்கு புறம்பாக அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற 17 ஆட்டோக்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் ஆட்டோக்களில் 2 பயணிகளுக்கு மேல் ஏற்றிச் செல்வது, அதிவேகத்தில் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT