முகப்பு
நாகப்பட்டினம்

கரோனா தடுப்பூசி முகாம்

 சீா்காழி வாணிவிலாஸ் தொடக்கப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

 சீா்காழி வாணிவிலாஸ் தொடக்கப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு அதன் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். துணை ஆளுநா் வைத்தியநாதன், டாக்டா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சீா்காழி நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி முகாமை தொடக்கிவைத்தாா். அப்போது அவா், வா்த்தக நிறுவனங்களின் உரிமையாளா்கள், ஊழியா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதுடன், இதுகுறித்து தங்களது கடைகள் முன் வாடிக்கையாளா்கள் பாா்வையில் படும்படி அறிவிப்பு அட்டை வைக்கவேண்டும்’ என்றாா்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவா்களுக்கு கபசுரக் குடிநீா் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதில் நகராட்சி வருவாய் ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், ரோட்டரி சங்க செயலாளா் குமாா், பொருளாளா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.