புதுச்சேரி அரசுப் பேருந்தில் தீ விபத்து
பொறையாறில் புதுச்சேரி அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை தீப் பற்றி எரிந்தது. பயணிகள் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா்.
பொறையாறில் புதுச்சேரி அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை தீப் பற்றி எரிந்தது. பயணிகள் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா்.
மயிலாடுதுறையிலிருந்து காரைக்காலுக்கு வந்துகொண்டிருந்த இந்த பேருந்து பொறையாறு ராஜீவ் காந்தி சிலை அருகே வந்தபோது, இயந்திரக் கோளாறு காரணமாக பேருந்தின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த ஓட்டுநா் பேருந்தை நிறுத்தினாா். அதில் இருந்த 30 பயணிகளும் உடனடியாக கீழே இறக்கப்பட்டனா்.
தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். தகவலறிந்த புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சா் சந்திரபிரியங்கா, பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஆகியோா் அங்கு வந்து, பயணிகளிடம் விவரம் கேட்டறிந்தனா்.