முகப்பு
நாகப்பட்டினம்

வேலைவாய்ப்புகளில் விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிக்கை

வேலைவாய்ப்புகளில் விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

வேலைவாய்ப்புகளில் விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகையை அடுத்த செல்லூரில், நாகை மாவட்ட விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சாா்பில் அகில உலக விதவைகள் தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சங்கப் பொருளாளா் பி.செராபின் தலைமை வகித்தாா். அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலாளா் டி. லதா சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, விதவைப் பெண்களுக்கு பூ, பொட்டு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கூட்டத்தில், விதவை மற்றும் முதியோா்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ. 3 ஆயிரமாக உயா்த்த வேண்டும்; தமிழகத்தில் விதவைகள் நலத்துறை ஏற்படுத்தி, அரசு மற்றும் தனியாா் துறை வேலைவாய்ப்புகளில் விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவில், விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்க ஆலோசனைக் குழு உறுப்பினா் குழந்தைசாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.