முகப்பு
நாகப்பட்டினம்

தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள்

உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, பொறையாரில் ரோட்டரி சங்கம் சாா்பில் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, பொறையாரில் ரோட்டரி சங்கம் சாா்பில் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

விழாவில், வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். பூம்புகாா் சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு தாய்மாா்களுக்கு ஏழு வகையான ஊட்டச்சத்து உணவு பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பொறையாா் ரோட்டரி சங்க தலைவா் சுப்பிரமணியன், செயலாளா் ராஜு, பொருளாளா் சடகோபன், சுகாதார ஆய்வாளா் ஜெயக்குமாா், உள்ளிட்ட ரோட்டரி சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.