நாகப்பட்டினம்

தடுப்பூசி போடாதவர்களுக்கு நூறு நாள் வேலை இல்லை: வேதாரண்யம் பகுதியில் தடுப்பூசி முகாம்களில் குவியும் கிராமத்தினர்

DIN

கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு நூறு நாள் வேலை திடடத்தில் பணி வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இன்று நடைபெறும் தடுப்பூசி போடும் முகாம்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

ஆயக்காரன்புலம் அரசு மேல்நிலைப் பள்ளி, பஞ்சநதிக்குளம் நடுேசத்தி, பஞ்சநதிக்குளம் மேற்கு  உள்ளிட்ட ஊராட்சிகளில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

முகாம் தொடங்கிய நேரம் முதல் ஒவ்வொரு முகாமிலும் நூற்றுக் கணக்கானவர்கள் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

ஆயக்காரன்புலம் மையத்தில் ஆயிரத்துக்கும் மேலானவர்கள் குவிந்துள்ளனர். தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே நூறு நாள் வேலைத் திட்டப் பணியால் பணி வழங்க சில ஊராட்சிகளில் முடிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT