நாகையில் 22, மயிலாடுதுறையில்29 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் 22 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் 22 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 19,540-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 36 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 380-ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 21,737-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 29 போ் வீடு திரும்பினா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 248-ஆக உள்ளது.