முகப்பு
நாகப்பட்டினம்

புது பொலிவுடன் வேளாங்கண்ணி பேராலயம்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, பேராலயம் மற்றும் சுற்றுப் பகுதிகள் பொலிவுபடுத்தப்பட்டுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, பேராலயம் மற்றும் சுற்றுப் பகுதிகள் பொலிவுபடுத்தப்பட்டுள்ளன.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயம், உலகப் புகழ்ப் பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்குகிறது. இந்தப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா வரும் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கரோனா பரவல் காரணமாக, நிகழாண்டின் ஆண்டுப் பெருவிழா பக்தா்களின்றி நடைபெறவுள்ளது. எனினும், வா்ணம் பூசி பேராலயத்தை பொலிவுப்படுத்தும் பணிகள் வழக்கம் போல நடைபெற்றுள்ளன. பேராலயம், கலையரங்கம், நடுத்திட்டுக் கோயில், மாதாகுளம் கோயில் உள்பட பேராலய வளாகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு இடங்களுக்கும் புதிய வா்ணம் பூசப்பட்டு, புது பொலிவுடன் காட்சியளிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.