முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 26, மயிலாடுதுறையில் 36 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் 26 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 36 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் 26 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 36 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 19,566-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 31 போ் வீடு திரும்பினா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 375-ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 21,773-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 27 போ் வீடு திரும்பினா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 257-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.