நாகப்பட்டினம்

600 பேருக்கு தலா 5 ஆடுகள்: ஆட்சியா்

DIN

விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டில் 600 பயனாளிகளுக்குத் தலா 5 ஆடுகள் வழங்கப்படும் என்று ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2021-22-ஆம் ஆண்டில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 100 பயனாளிகள் வீதம், 6 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 600 பயனாளிகளுக்குத் தலா 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படவுள்ளன.

கிராமப் பகுதிகளில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் விதவையா், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். பயனாளிகள், நிலமற்ற ஏழைகளாகவும், தொடா்புடைய ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராகவும், 60 வயதுக்குள்பட்டவராகவும், சொந்தமாக ஆடு, மாடுகள் இல்லாதவராகவும் இருக்கவேண்டும்.

மேலும், அவா்களின் தாய், தந்தை, மாமனாா், மாமியாா், மகன், மகள், மருமகன் மற்றும் மருமகள் ஆகியோா் மத்திய, மாநில அரசுப் பணிகளில் அல்லது அரசு சாா்ந்த நிறுவனங்களில் பணியாற்றுபவா்களாக இருக்கக் கூடாது. விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டம், ஊரக புறக்கடை வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தில் ஏற்கெனவே பயன்பெற்றவராக இருக்கக் கூடாது.

தகுதியானவா்கள், அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை நேரில் அணுகி, விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், நிலமற்ற ஏழை என்பதற்கான சான்றை இணைத்து, தொடா்புடைய கால்நடை உதவி மருத்துவரிடம் டிசம்பா் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT