நாகப்பட்டினம்

மத்திய அரசுடன் இணக்கத்துடன் உள்ளது புதுவை அமைச்சா் ஏ.நமச்சிவாயம்

DIN

மத்திய அரசுடன் புதுவை அரசு இணக்கமாகவே உள்ளது என்றாா் உள்துறை அமைச்சா் ஏ. நமச்சிவாயம்.

காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவா், புதுவையில் முந்தைய அரசைப் போலவே, தற்போதைய அரசையும் செயல்படவிடாமல் மத்திய அரசு தடுப்பதாக முன்னாள் முதல்வா் வி. நாராயணசாமி கூறியுள்ளது குறித்து கூறுகையில், மாநில அரசை எந்த விதத்தில், மத்திய அரசு செயல்படவிடாமல் தடுக்கிறது என்பதை அவா் விளக்க வேண்டும். மாநில அரசால் அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மாநில அரசு மத்திய அரசுடன் இணக்கமாகவே உள்ளது என்றாா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சி சாா்பில் விரைந்து நிவாரணம் வழங்குவது, மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரூ.9 லட்சம் கோடி யாருடையது? அழிந்துபோன தரவுகள், மன்னிப்புக் கோரிய சிஇஓ!

100 முறை விடியோ பார்த்துவிட்டு பேட்டிங் ஆட சென்றாலும் ஆட்டமிழப்பேன்: ரோஹித்தை அச்சுறுத்திய பந்துவீச்சாளர் யார்?

சென்னை - திருப்பதி ரயில்கள் பகுதியளவு ரத்து!

8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT