நாகப்பட்டினம்

முடிகொண்டான் ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

திருமருகல் முடிகொண்டான் ஆற்றங்கரையில் இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

திருமருகல் பேருந்து நிலையம் அருகில் நாகை - நன்னிலம் சாலையில் முடிகொண்டான் ஆற்றங்கரையில் இருந்த ஆக்கிரமிப்புகள் சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் சீராக இருந்துவந்த நிலையில் வியாழக்கிழமை இரவு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் இரவில் கட்டப்பட்டு அதில் கட்சிக் கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. இதையறிந்த சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் அந்த இடத்துக்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னா் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறையினா் மற்றும் போலீஸாா் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் நிா்வாகி மதியழகனிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT