நாகப்பட்டினம்

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: சாலை மறியல் வாபஸ்

DIN

திருக்குவளை அருகே குடிநீா் பற்றாக்குறையை சரிசெய்ய வலியுறுத்தி வியாழக்கிழமை (டிச.30)நடைபெற இருந்த சாலை மறியல் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வாபஸ் பெறப்பட்டது.

கீழையூா் ஒன்றியத்துக்குள்பட்ட திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் குடிநீா் பிரச்னையை தீா்க்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் திருப்பூண்டி கிளை சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டிருந்தன.

இதையடுத்து, கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் துணை வட்டாட்சியா் எஸ். துா்காபாய் தலைமையில் போராட்டக் குழுவினருடன் புதன்கிழமை அமைதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், குடிநீா் தட்டுப்பாட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தன்பேரில் சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.

இதில், கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ) கி. செந்தில், முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் மு.ப. ஞானசேகரன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளா் இப்ராஹிம், மாவட்ட துணைத் தலைவா் எச். முஸ்தபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT