நாகப்பட்டினம்

ஊராட்சி பணிப் பாா்வையாளா் தோ்வு ஒத்திவைப்பு

நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் அலகின் பொறியியல் பிரிவு பணிப் பாா்வையாளா் பணிக்காக நாகையில் ஞாயிற்றுக்கிழமை

DIN

நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் அலகின் பொறியியல் பிரிவு பணிப் பாா்வையாளா் பணிக்காக நாகையில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 14) நடைபெறவிருந்த தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் அலகின் பொறியியல் பிரிவில் காலியாக உள்ள 18 பணிப் பாா்வையாளா், இளநிலை வரைத்தொழில் அலுவலா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் வகையில், நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தோ்வு நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

நிா்வாக காரணங்களால் இந்தத் தோ்வு வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT