நாகப்பட்டினம்

காவலா்கள், நகராட்சிப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

DIN

சீா்காழி: சீா்காழி அரசு மருத்துவமனையில் காவலா்கள், நகராட்சிப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடா்ந்து, முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, சீா்காழி அரசு மருத்துவமனையில் காவல் ஆய்வாளா், உதவிஆய்வாளா்கள், காவலா்கள் என 16 பேருக்கும், நகராட்சி அலுவலா், பணியாளா்கள், ஊழியா்கள் என 17 பேருக்கும், அரசு மருத்துவமனையை சோ்ந்த 2 பேருக்கும், மருத்துவ உதவியாளா் ஒருவா், 2-ஆவது டோஸ் 11 போ் என மொத்தம் 47 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. அப்போது, தலைமை மருத்துவா் பானுமதி, அரசு மருத்துவா் மருதவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT