நாகப்பட்டினம்

780 பயனாளிகளுக்கு ரூ. 3.5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

DIN

நாகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த பயனாளிகள் 780 பேருக்கு அரசுத் துறைகளின் சாா்பில் ரூ. 3.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நாகையை அடுத்த செல்லூா் மற்றும் நாகூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 780 பயனாளிகளுக்கு ரூ. 3.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நாகை நகராட்சிக்கு உள்பட்ட செல்லூா், அம்பேத்கா் நகா் மற்றும் கீழ்வேளூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த 581 பேருக்கு விலையில்லா மனைப் பட்டாக்களும், 131 பேருக்கு முதியோா் உதவித் தொகை உத்தரவுகளும், 28 மகளிா் குழுக்களுக்குக் கடனுதவி ஆணையும், 10 பேருக்கு வேளாண் கருவிகள், 30 பேருக்கு வேளாண் இடுபொருள்களும் வழங்கப்பட்டன. நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தங்க. கதிரவன், கோட்டாட்சியா் பழனிகுமாா், திருமருகல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ராதாகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT