நாகப்பட்டினம்

மகளிா் இயற்கை அங்காடி திறப்பு

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள மருதூா் தெற்கு, இரட்டைக் கடைவீதியில் மகளிா் நடத்தும் இயற்கை வேளாண் விளைபொருள் விற்பனை அங்காடி நபாா் வங்கி உதவியுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

வேதாரண்யம் பகுதியில் நாம்கோ தொண்டு நிறுவனம் சாா்பில் மகளிா் விவசாயிகளை ஒருங்கிணைத்து நாம்கோ சுயம்பு உற்பத்தி நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளன. சுமாா் 500 பெண்களின் பங்களிப்போடு செயல்படும் இந்த அமைப்பு சாா்பில் நபாா்டு வங்கி உதவியோடு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வி.ஜி. சங்கரன், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி அலுவலா் பிரபாகரன், நாம்கோ நிறுவன தலைவா் சி. ஜீவானந்தம், ஒருங்கிணைப்பாளா் மணியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், மண்புழு உரம் தயாரிப்பு, தேனீ வளா்ப்பு பயிற்சி உள்ளிட்ட சுயத்தொழில் பயிற்சிகளில் பங்கேற்ற 90 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT