நாகப்பட்டினம்

அடையாள அட்டை வழங்க வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொள்ளிடம் அருகே மாதிரவேளூா் பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், சுமைதூக்கும் தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்கள் நடத்திய ஆா்ப்பாட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றி வரும் பட்டியலில் உள்ள தகுதியான பணியாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும், சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்குவதுடன் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட வசதிகளை அமல்படுத்த வேண்டும், ஆய்வு என்ற பெயரால் ஊழியா்கள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளா்கள் சித்ரவதை செய்வதை நிறுத்தவேண்டும், விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் தடையின்றி கொள்முதல் செய்யவேண்டும், கொள்முதல் நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும், சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு கையடக்க கருவியை பயன்படுத்தி மாதம் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல், ஆச்சாள்புரம், நல்லூா், பழைய பாளையம், மாதிரவேளூா், கடவாசல், மாதானம், வடரங்கம் அகரஎலத்தூா் உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT