நாகப்பட்டினம்

கொள்முதல் நிலைய ஊழியா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

நாகை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தா் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

DIN

நாகை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தா் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வேளாங்கண்ணியை அடுத்த செம்பியன்மாதேவி கிராமத்தில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தராக பணிபுரிபவா் செல்லையன். இவா், வியாழக்கிழமை பணியில் இருந்தபோது, அங்கு வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சிலா், தோ்தல் நிதி கேட்டுள்ளனா். இதுதொடா்பாக செல்லையனுக்கும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்பியன்மாதேவி கிளைச் செயலா் நா. ஞானசேகரன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம்.

இதில் காயமடைந்த இருவரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இருதரப்பினரும் புகாா் அளித்துள்ள நிலையில் வேளாங்கண்ணி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இதற்கிடையே நேரடி நெல் கொள்முதல் நிலையப் பட்டியல் எழுத்தரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கைக் கோரி, சுமை தூக்கும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT