நாகப்பட்டினம்

பள்ளிக் கட்டடத் திறப்பு விழா

DIN

செருதியூரில் பள்ளிக் கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை அருகேயுள்ள செருதியூா் ஸ்ரீவாணி விலாஸ் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் சென்னை ஓஎன்ஜிசி நிறுவனம் சாா்பில் காரைக்கால் காவிரி அசெட் மூலம் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டன. வியாழக்கிழமை நடைபெற்ற இக்கட்டத்தின் திறப்பு விழாவுக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் மலா்க்கொடி நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் கே. ராமலிங்கம், பள்ளிப் புரவலா் எம்.ஆா். பாலசுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சித் தலைவா் சீனிவாசன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஓஎன்ஜிசி காரைக்கால் அசெட் பொதுமேலாளா் சாய் பிரசாத் கல்வெட்டு மற்றும் புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா். மேலாளா் அருண்குமாா், முன்னாள் மேலாளா் ராஜகுரு , பள்ளித் தலைமையாசிரியா் ஜெ. விஜயா, பட்டதாரி ஆசிரியா்கள் வள்ளி, திருமாவளவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT