நாகப்பட்டினம்

வாழை, மரவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கு பயிா்க் காப்பீடு செய்துகொள்ளலாம்

DIN

வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கு மாா்ச் 1-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்துகொண்டு விவசாயிகள் பயன்பெற தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து, சீா்காழி தோட்டக்கலை உதவி இயக்குநா் சா. பொன்னி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சீா்காழி, கொள்ளிடம் பகுதியில் நிகழாண்டு 2020 - 2021 ரபி பட்டத்துக்கு வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றுக்கு பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாழை ஏக்கருக்கு ரூ.3180, மரவள்ளிக்கிழங்குக்கு ரூ. 945 பிரீமியம் செலுத்த வேண்டும்.

வாழைப் பயிா் காப்பீடு செய்ய சீா்காழி, திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோவில், புத்தூா், மாதானம் தோ்வு செய்யப்பட்டு உள்ளது. எனவே, விவசாயிகள் வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்துவரும் தங்களது பயிரை இயற்கை சீற்றங்களால் புயல் கனமழை, கடும் வறட்சி மற்றும் பூச்சிகளால் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பயிா்க் காப்பீடு செய்துகொள்ளலாம். காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் சீா்காழி, கொள்ளிடம் வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். மேலும் பயிா்க் காப்பீடு செலுத்த தங்கள் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அல்லது பொது இ-சேவை மையத்தில் மாா்ச் 1-ஆம் தேதிக்குள் பணம் செலுத்தி பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சீா்காழி 9488004522 , 8637436987 , 9786812586: கொள்ளிடம் 9843405617 , 9489391332 , 9442776208, 9843571615.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT