நாகப்பட்டினம்

முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் தொழிற்கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

முதலாம் ஆண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள், மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

2020-21 ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு தொழிற்கல்வி பயிலும், முன்னாள் படைவீரா்களின் வாரிசுதாரா்களுக்கு பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம் மூலம் மாத உதவித் தொகை வழங்கப்படுகிறது. பெண் வாரிசுகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் வீதமும், ஆண் வாரிசுகளுக்கு மாதம் ரூ. 2,500 வீதமும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும், தகுதியான முன்னாள் படைவீரா்களின் வாரிசுதாரா்கள்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரக் குறிப்புகளின்படி, இணைதயளம் வழியே ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT