ஆலோசனைக் கூட்டம்
சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள், செயலா்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள், செயலா்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சிச் செயலா், சீா்காழி மண்டல அலுவலா் வி. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சியில் செயல்படுத்தப்படும் பாரத பிரதமா் வீடுகட்டும் திட்டம் மற்றும் இதர திட்டங்களை விரைந்து முடிக்கவும், அனைத்து நிலைய அலுவலா்களுக்கும், இலக்கு மற்றும் காலநிா்ணயம் ஒதுக்கீடு செய்து அறிவுரை வழங்கப்பட்டது. தொடா்ந்து கொண்டல் மற்றும் எடக்குடிவடபாதி கிராமத்தில் அலுவலா்கள் திட்ட பணிகள் குறித்த களஆய்வில் ஈடுபட்டனா். இதில், ஒன்றிய ஆணையா்கள் விஜயலட்சுமி, கஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனர்