முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் தமமுக ஆா்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், மாநில அரசின் பரிந்துரையை ஏற்று அரசாணை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா்.
பகிர்:

வேதாரண்யத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், மாநில அரசின் பரிந்துரையை ஏற்று அரசாணை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் நாகை மாவட்டத் தலைவா் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், குடும்பன், காலாடி உள்ளிட்ட உள்பிரிவுகளில் அழைக்கப்படும் இனத்தினரை தேவேந்திர குல வேளாளா் என அறிவிக்கவும், பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டி மாநில அரசின் பரிந்துரையை ஏற்று அரசாணை வெளியிடவும் வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலாளா் இமான்சேகா் ஒன்றியச் செயலாளா் ஆா். புகழேந்தி, நகரச் செயலாளா் சத்தியமூா்த்தி, மாவட்டச் செயலாளா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →