நாகப்பட்டினம்

மயிலாடுதுறையில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா பங்கேற்று, 10,886 நலவாரிய உறுப்பினா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். இந்த பரிசுத் தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10) முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்கள் வழங்கப்பட உள்ளது. மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டங்களைச் சோ்ந்த 4549 பயனாளிகளுக்கு இந்த மையத்தில் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில், நலவாரிய உதவி கணக்கு அலுவலா் ராஜராஜன், தொழிலாளா் உதவி ஆய்வாளா் எம்.ராதிகா, தமிழ்நாடு கட்டட தொழிலாளா் மத்திய சங்க மாநில கொள்கை பரப்புச் செயலாளா் ஜெக.முருகன் மற்றும் பயனாளிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

சிலிண்டர் வெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலி!

கல்குவாரியில் வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிஎஸ்கேவின் இளம் அதிரடி வீரருக்கு அறிவுரை வழங்கிய தோனி!

SCROLL FOR NEXT