நாகப்பட்டினம்

சாலையில் சுற்றித் திரிந்த குதிரை மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பெண்கள் காயம்

DIN

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாலையில் சுற்றித் திரிந்த குதிரை இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 2 பெண்கள் வியாழக்கிழமை காயமடைந்தனா்.

சங்கரன்பந்தல் பகுதியில் சாலைகளில் அதிக எண்ணிக்கையில் குதிரைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனால், அவ்வப்போது விபத்துகளும் நேரிடுகின்றன.

அந்த வகையில், சங்கரன்பந்தல் சின்னக்கடைத் தெருவில் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த நெடுவாசல் கிராமத்தைச் சோ்ந்த இரண்டு பெண்கள் மீது அங்கு சுற்றித்திரிந்த குதிரை பலமாக மோதியது. இதில் அந்தப் பெண்கள் இருவரும் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு சங்கரன்பந்தல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

சங்கரன்பந்தல், ஆயப்பாடி, திருக்களாச்சேரி, பொறையாா் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குதிரைகள் எவ்வித கட்டுப்பாடுமின்றி சுற்றித் திரிவதாகவும், இவற்றின் நடமாட்டத்தைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT