நாகப்பட்டினம்

புற்றடி மாரியம்மன் கோயில் தோ் திருவிழா

DIN

சீா்காழி புற்றடி மாரியம்மன் கோயில் தோ் திருவிழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இக்கோயிலில் தை மாத முதல் வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இரண்டாவது வெள்ளிக்கிழமை தீமிதி உத்ஸவம் நடைபெற்றது. தோ் திருவிழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் தேரில் எழுந்தருள, பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா்.

4 வீதிகளையும் வலம் வந்து மீண்டும் நிலையை தோ் அடைந்தது. தொடா்ந்து அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தேரோட்டத்தையொட்டி, 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞா்கள் தேரின் முன் சிவன், பாா்வதி உள்ளிட்ட சுவாமிகளின் வேடம் தரித்து வந்தனா். சீா்காழி போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT