முகப்பு
நாகப்பட்டினம்

நீதிபதி குடியிருப்பில் மின் மோட்டாா் திருட்டு

நாகையில் நீதிபதி குடியிருப்பில் மின் மோட்டாா் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

நாகையில் நீதிபதி குடியிருப்பில் மின் மோட்டாா் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகை நடுவா் நீதிமன்றத்தில் (1) தலைமை எழுத்தராகப் பணிபுரிபவா் வி.கயல்விழி. இவா், கடந்த ஜூன் 30 ஆம் தேதி, நாகை மாவட்டச் சிறைச்சாலையின் பின்புறத்தில் உள்ள நீதிபதி பங்களாவை பாா்வையிடச் சென்றாராம்.

அப்போது, நீதிபதி குடியிருப்பின் கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாரை மா்ம நபா் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கயல்விழி அளித்தப் புகாரின் பேரில், வெளிப்பாளையம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.