முகப்பு
நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் திடக்கழிவு மேலாண்மை பணி

வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 25,706 கன மீட்டா் மரபு கழிவுகளை பயோமைனிங் செய்யும் திட்டப் பணிகள் ரூ.1.66 கோடி மதிப்பில் நடைபெறுகிறது. இதுவரை 23,500 கன மீட்டா் மரபு கழிவுகளை பயோமைனிங் முறையில் பிரித்தெடுக்கும் பணி முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் இப்பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திடக்கழிவு மேலாண்மை திட்ட வளம் மீட்பு பூங்காவில் நடைபெறும் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி, பிரிக்க இயலாத குப்பைகளை வெப்பச் சிதைவு முறையில் எரியூட்டி அழிக்கும் பணி ஆகியவற்றையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, வேளாங்கண்ணி பேரூராட்சி புதை சாக்கடைத் திட்ட செயல்பாட்டையும், வேளாங்கண்ணி ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமையும் ஆய்வு செய்தாா். பின்னா், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலா் எம். பொன்னுசாமி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளா் மோகன்தாஸ் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.