நாகப்பட்டினம்

பருத்தி ஏலம்: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பருத்திக்கு எதிா்பாா்த்த விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

நாகை விற்பனைக் குழு செயலாளா் ரமேஷ் தலைமையிலும், தலைமை அலுவலக பொறுப்பாளா் சிலம்பரசன் முன்னிலையிலும் மறைமுக பருத்தி ஏலம் நடைபெற்றது.

இதில், மயிலாடுதுறை, தஞ்சாவூா், கடலூா், நாகப்பட்டினம், திருவாருா், தேனி, சத்தியமங்கலம், ஆத்தூா், விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 18-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனா். ஏலத்துக்கு சுமாா் 3600 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் எடுத்து வந்தனா். இதில் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 7,399-ம், சராசரியாக ரூ. 6,600-ம் விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT