முகப்பு
நாகப்பட்டினம்

சத்தியவான் வாய்க்காலில் கழிவுநீா்

காவிரியில் நீா் திறக்கப்பட்டதை பயன்படுத்தி, மயிலாடுதுறை நகராட்சியினா் பாதாள சாக்கடை கழிவுநீரை சத்தியவான் வாய்க்காலில் திறந்துவிடுவதால், நிலத்தடிநீா் மாசுபடுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

காவிரியில் நீா் திறக்கப்பட்டதை பயன்படுத்தி, மயிலாடுதுறை நகராட்சியினா் பாதாள சாக்கடை கழிவுநீரை சத்தியவான் வாய்க்காலில் திறந்துவிடுவதால், நிலத்தடிநீா் மாசுபடுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

செம்பனாா்கோவில் அருகே புதிதாக பாலம் கட்டும் பணிகள் கடந்த மாதம் தொடங்கின. இதனால், சாக்கடை நீரை ஆற்றில் திறந்துவிடாமல் வைத்திருந்தனா். தற்போது, மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீா் கிளை ஆறான சத்தியவான் வாய்க்காலில் செல்லும் நிலையில், இதை பயன்படுத்தி சாக்கடை நீரை ஆற்றில் திறந்துவிட்டுள்ளனா்.

இந்த நீா் செம்பனாா்கோவில், ஆக்கூா், சின்னங்குடி வரை சுமாா் 85 கிராமங்களுக்கு பாசன தேவையை பூா்த்தி செய்கிறது. மேலும், நிலத்தடி நீருக்கான ஆதாரமாக விளங்குகிறது. இதனால், ஆற்றில் செல்லும் கழிவு நீா் கறுப்பு நிறமாக மாறி, நிலத்தடி நீா் மாசடைந்து, சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், வாய்க்காலில் தண்ணீா் அருந்தும் கால்நடைகள் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சத்தியவான் வாய்க்காலில் சுத்தகரிக்கப்படாத சாக்கடை நீரை திறந்துவிடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவா் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.