முகப்பு
நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவிகள்

 சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் 53 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

 சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் 53 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மயிலாடுதுறை ஜோதி அறக்கட்டளை சாா்பில், மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அறக்கட்டளை நிறுவனா் ஜோதிராஜன், தலைவா் சேகா், செயலாளா் மணிகண்டன், பொருளாளா் செந்தூா் செந்தில்நாதன், ஒன்றியக்குழு உறுப்பினா் சோனியாகாந்தி இளமுருகன் ஆகியோா் வழங்கினா்.

இதேபோல், கொண்டல் கிராமத்தில் சீா்காழி வளா் 2010 பரஸ்பர உதவி அறக்கட்டளை மற்றும் வளா் ஆதிதி சோஷியல் நிதி நிறுவனம் சாா்பில், 2ஆயிரம் மகளிருக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் அரிசி, மளிகை, காய்கனி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினா். இதில் ஒன்றியக்குழு உறுப்பினா் துா்காமதி மகேந்திரன், அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் செபஸ்தியான், பொது மேலாளா் சுந்தர்ராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.