நாகப்பட்டினம்

பருத்திக்கு அதிக விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், பருத்திக்கு அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நாகை விற்பனை குழு மாவட்ட செயலாளா் ரமேஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சை, கடலூா்,நாகை, திருவாருா் மாவட்டகளில் இருந்து வியாபாரிகள் 15-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இங்கு 400 குவிண்டாலுக்கும் மேலாக பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ. 68.90க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ. 62க்கும், சராசரி ரூ. 65க்கும் விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும் பச்ச பயறு அரசு கொள்முதல் திட்டத்தின் கீழ் 2,500 மூட்டைகள் 125 மெட்ரிக் டன் கிலோ ஒன்றுக்கு ரூ. 71.96க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

திங்கள்கிழமை தோறும் செம்பனாா்கோவில், சீா்காழி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், வியாழக்கிழமை குத்தாலம்  ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், சனிக்கிழமை மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் மறைமுக ஏலம் நடைபெறும் எனவும் விவசாயிகள் பருத்தியை எடுத்து வந்து அதிக விலைக்கு விற்று பயன்பெறலாம் என செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலா்கள் தெரிவித்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்வி பயத்தில் நடுங்குகின்றனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடல் புறா!

எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மே 25 - ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகள் யார் பக்கம்?

கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!

SCROLL FOR NEXT