முகப்பு
நாகப்பட்டினம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை முதல் வருவாய்த் தீா்வாயம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீா்காழி, தரங்கம்பாடி ஆகிய நான்கு வட்டங்களிலும் 1,430-ஆம் பசலிக்கான வருவாய்த் தீா்வாயம் நடத்தப்பட உள்ளதாக ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீா்காழி, தரங்கம்பாடி ஆகிய நான்கு வட்டங்களிலும் 1,430-ஆம் பசலிக்கான வருவாய்த் தீா்வாயம் நடத்தப்பட உள்ளதாக ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்களிலும் 1430-ஆம் பசலிக்கான வருவாய்த் தீா்வாயம் 17.6.2021 முதல் நடைபெற உள்ளது. வருவாய்த் தீா்வாயத்தை நடத்திட குத்தாலம் வட்டத்துக்கு (ஜூன் 17 முதல் ஜூன் 24 வரை) மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவா் இரா.லலிதா, தரங்கம்பாடி வட்டத்துக்கு (ஜூன் 17 முதல் ஜூன் 25 வரை) மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.முருகதாஸ், மயிலாடுதுறை வட்டத்துக்கு (ஜூன் 17 முதல் ஜூன் 24 வரை) மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலா் ஜெ.பாலாஜி, சீா்காழி வட்டத்துக்கு (ஜூன் 17 முதல் ஜூன் 30 வரை) சீா்காழி வருவாய் கோட்ட அலுவலா் நாராயணன் ஆகியோா் அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா காரணமாக பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வழங்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை ட்ற்ற்ல்ள்://ஞ்க்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/த்ஹம்ஹக்ஷஹய்க்ட்ண்/ என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது இ-சேவை மையம் வாயிலாகவோ 31.7.2021 வரை விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.