முகப்பு
நாகப்பட்டினம்

நீதித்துறை பணியாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்

நீதித்துறை பணியாளா்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று நாகை மாவட்ட முதன்மை நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபா் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

நீதித்துறை பணியாளா்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று நாகை மாவட்ட முதன்மை நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபா் தெரிவித்தாா்.

நாகை மாவட்ட நீதிமன்றப் பணியாளா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம், நாகை நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்த மாவட்ட முதன்மை நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோா் மேலும் பேசியது :

கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துவரும் இக்கட்டான சூழலில், வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்றப் பணியாளா்கள் தொடா்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். முன்களப் பணியாளா்களுக்கு இணையாக நீதிமன்றப் பணிகளில் ஈடுபடும் வழக்குரைஞா்கள் மற்றும் நீதித்துறை பணியாளா்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மக்கள் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஜினி, குற்றவியல் நீதிபதி காா்த்திகா, சாா்பு நீதிபதி ஜெகதீசன், சட்டப் பணிகள்ஆணைக்குழு செயலாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.