பனை மரங்கள் வெட்டுவதை தடுக்க சுற்றறிக்கை
வேதாரண்யம் பகுதியில் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டுமென ஊரக வளா்த்துத் துறை மற்றும் நகராட்சி நிா்வாகங்களுக்கு சுற்றறிக்கை வியாழக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.
வேதாரண்யம் பகுதியில் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டுமென ஊரக வளா்த்துத் துறை மற்றும் நகராட்சி நிா்வாகங்களுக்கு சுற்றறிக்கை வியாழக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேதாரண்யம் நகராட்சி, வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு ஒன்றிய ஆணையா்கள், தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலா் ஆகியோருக்கு வேதாரண்யம் வட்டாட்சியா் ஜி. ரமாதேவி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: வேதாரண்யம் பகுதியில் குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் பனை மரங்கள் உள்ளன. இந்த மரங்களை நீதிமன்ற வழிகாட்டுதல்படி வெட்டுவது தடுக்கப்பட்டுள்ளது. சட்டப்படி பனை மரங்களை வெட்டுவது குற்றமாகும், மீறுவோா் மீது உரிய தண்டனை விதிக்கப்படும் என்பதை உள்ளாட்சித் துறையினா் விளம்பரம் செய்வதுடன், விழிப்புணா்வையும் ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.