தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்
தொழிலாளா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி நாகையில் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி நாகையில் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேளாண் திருத்தச் சட்டங்கள், தொழிலாளா் நலச்சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க வேண்டும், பொது நிறுவன சொத்துகளை தனியாருக்கு விற்பனை செய்யும் நடைமுறையை மத்திய அரசு கைவிடவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த நாகை மக்களவை தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தொமுச அமைப்புசாராத் தொழிலாளா் சங்கத் தலைவா் சேகா், சிஐடியு நாகை மாவட்டச் செயலாளா் கே. தங்கமணி, ஏஐடியுசி நாகை மாவட்டப் பொருளாளா் மகேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் வி. சரபோஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.