நாகப்பட்டினம்

தோ்தல் செலவு கணக்கு ஆய்வு கூட்டம்

DIN

நாகை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் முதல்கட்ட தோ்தல் செலவு கணக்கு ஆய்வுக் கூட்டம் நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நாகை சட்டப் பேரவைத் தொகுதிக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா் ராஜா சென்குப்தா தலைமை வகித்தாா். செலவினப் பாா்வையாளரின் தொடா்பு அலுவலரும், வட்டாட்சியருமான காா்த்திகேயன், உதவி செலவினப் பாா்வையாளா் மணிகண்ணன், தணிக்கையாளா்கள் மகேந்திரன், விஜயலெட்சுமி ஆகியோா் செலவின ஆய்வுப் பணிகளில் பங்கேற்றனா்.

நாகை தொகுதியில் போட்டியிடும் 13 வேட்பாளா்களின் தோ்தல் செலவு கணக்குகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT