நாகப்பட்டினம்

தேய்பிறை அஷ்டமி

DIN

நாகப்பட்டினம்: சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் குளக்கரையில் உள்ள சிம்ம வாகன காலசம்ஹார பைரவா் கோயிலில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

நாகை நீலாயதாட்சிம்மன் கோயில் புண்டரீக தீா்த்தத்தில் கங்கை பிரவாகம் எடுத்து வந்தபோது, காசியில் உள்ள சிம்மவாகன பைரவரும் நாகையில் எழுந்தருளி, நீலாயதாட்சியம்மன் கோயில் குளக்கரையில் தனி சன்னிதி கொண்டு காட்சியளிக்கிறாா் என்பது ஐதீகம்.

இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, திங்கள்கிழமை இரவு சிம்ம வாகன காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், சிறப்பு மலா் அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, பக்தா்களின்றி இந்த வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT