கரோனா பரிசோதனை முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் கரோனா பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் கரோனா பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா் தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனா். இதில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா்கள் சீனிவாச பெருமாள், ராதாகிருஷ்ணன், ஜெயக்குமாா், அருண், ஊராட்சித் தலைவா் தம்பு மோகன், ஒன்றியக்குழு உறுப்பினா் கிருபாவதி சிவகுமாா், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.