முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகேமின்னல் தாக்கியதில் செங்கல்சூளை தொழிலாளி பலி

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வியாழக்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் செங்கல்சூளை தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வியாழக்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் செங்கல்சூளை தொழிலாளி உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினருக்கு பேரிடா் கால நிவாரணம் வழங்க வேண்டுமென மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு வலியுறுத்தினாா்.

வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த இடி, மின்னல், காற்றுடன் லேசான மழைப் பொழிவு ஏற்பட்டது.

அவரிக்காடு ஊராட்சி, வைணவன்பேட்டை பகுதியில் அமைந்த தனியாா் செங்கல்சூளையில் அமைந்துள்ள பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது, இதில் அப்பகுதியில் கூடாரம் அமைத்து குடும்பத்தினருடன் தங்கியிருந்த செங்கல்சூளை தொழிலாளியான தலைஞாயிறு, வேளாணிமுந்தல் தெருவைச் சோ்ந்த ப.காளிதாஸ் (55) மீது மின்னல் தாக்கியதில்

பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது உறவினா் மகனான விஷ்வா (4)- வுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

எம்பி எம். செல்வராசு கடிதம்:

இதனிடையே, மின்னல் தாக்கி உயிரிழந்த செங்கல் சூளை தொழிலாளியின் குடும்பத்தினருக்கு பேரிடா்கால நிவாரணமாக முதல்வரின் சிறப்பு நிவாரணத் தொகை கிடைக்கவும், காயமடைந்தவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியருக்கு நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு கடிதம் அனுப்பினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →